Rajesh Krishnan

Namaste

GitHub

21 November 2026

Thirukkural Chapter 004

by Rajesh Krishnan

  4 : அறத்துப்பால் : பாயிரவியல் : அறன்வலியுறுத்தல்  
1 சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு
 
2 அறத்தினூஉங் காக்க முமில்லை யதனை
மறத்திலி னூங்கில்லை கேடு
 
3 ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்
 
4 மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற
 
5 அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்
 
6 அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை
 
7 அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை
 
8 வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
 
9 அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில
 
10 செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி
 

Comments and Research Notes

Verse 1

Verse 2

Verse 3

Verse 4

Verse 5

Verse 6

Verse 7

Verse 8

Verse 9

Verse 10

Chapter Summary

tags: kuralmatch