Rajesh Krishnan

Namaste

GitHub

11 November 2026

Thirukkural Chapter 011

by Rajesh Krishnan

  11 : அறத்துப்பால் : இல்லறவியல் : செய்ந்நன்றியறிதல்  
1 செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது
 
2 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது
 
3 பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
னன்மை கடலிற் பெரிது
 
4 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்
 
5 உதவி வரைத்தன் றுதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
 
6 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு
 
7 எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு
 
8 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று
 
9 கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்
 
10 எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
ब्रह्मघ्ने च सुरापे च चोरे भग्नव्रते तथा |
निष्कृतिर्विहिता सद्भि: कृतघ्ने नास्ति निष्कृतिः ||
Valmiki Ramayanam Kishkinda Kandam
(Baroda Critical Edition) 4.33.12

Comments and Research Notes

Verse 1

Verse 2

Verse 3

Verse 4

Verse 5

Verse 6

Verse 7

Verse 8

Verse 9

Verse 10

The kural is more general as to what is forgivable, whereas the Ramayanam lists specific examples. The match between कृतघ्ने नास्ति निष्कृति and உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு is quite close. A slight variation of the shloka appears as 4.34.12 in the Southern Rescension of the text (has गो घ्ने च एव instead of ब्रह्मघ्ने च). Neither the kural nor the shloka is condoning the other sins here.

Chapter Summary

tags: kuralmatch