Rajesh Krishnan

Namaste

GitHub

3 November 2026

Thirukkural Chapter 043

by Rajesh Krishnan

  43 : பொருட்பால் : அரசியல் : அறிவுடைமை  
1 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு
முள்ளழிக்க லாகா வரண்
 
2 சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு
 
3 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு
 
4 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
 
5 உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு
 
6 எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு
 
7 அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்
 
8 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்
 
9 எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்
 
10 அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்
 

Comments and Research Notes

Verse 1

Verse 2

Verse 3

Verse 4

Verse 5

Verse 6

Verse 7

Verse 8

Verse 9

Verse 10

Chapter Summary

tags: kuralmatch