Rajesh Krishnan

Namaste

GitHub

23 October 2026

Song of the Divine Dog

by Rajesh Krishnan

தெய்வீகநாய் / தெய்வீகனாய் - கோவிறை

தெய்வீகநாய்-பைரவன் எருமை-எமன் கரி-அரி அரி-கல்கி ஆடு-தீ

நாகம்-அரன் காகம்-சனி என விலங்கொடு-புத்தேள் இயைவதேனோ?

பகலவன்-அரியும் விடையும் சேவலும் எலியும் புலியும் மீன்-ஆமை-பன்றியும்

அரியான-அரியும் பிறபலவுயிரும் கோடரியால் கொன்று குறுகுவார் நரரோ?

குரங்கும் கரடியும் பாறும் அணிலும் மயிலும் ஆவினத்தாயும் அதுபோல்

பாலூட்டும் எருமையுமாடும் அதனை புத்தனேயாயினும் புசிப்பது கலியோ?

விலங்கிய ஒழுக்கால் அறம் தாழ்ந்து விலங்கிய வலையில் தானாய் வீழ்ந்து

விலங்கினம் வருத்தி உண்டூன்பெருக்கி விலங்கணிதர்க்கு மீண்டும் பிறப்போ?

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டார் அறவோர்

எதிர்ப்பும் வெகுளியும் நீக்குவார் அருகினோர்

வள்ளுவன் பதஞ்சலி பிறபல சான்றோர்

வருத்தாமைக்களித்த வல்லிய சான்று

பாலும் தெளிதேனும் புலாலும் அண்டமும்

தோலும் பட்டும் பவழமுத்தும் விலக்கி

வீணாய் விலங்கினம் தெய்யா வீக(ர)னாய்

வியத்தகு விளக்காய் விளங்கு தெய்வீகனாய்

tags: misc